ஒன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜாங்கணை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபரின் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

11 மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பிரதேசத்தை சேர்ந்த 70 சிறுவர்கள் அடங்களாக 300 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

You might also like
error: Content is protected !!