வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் தலா மூன்று இராணுவத்தினர்

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பிரதேசத்தில் ஏதேனும் குற்றச்செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்.இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு படையினர், கிராம சேவகர் அலுவலகத்துடன் இணைந்து கடமையாற்றுவார்கள்.அதேவேளை காங்கேசன்துறை கடற்படை முகாமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள வடக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதி இசுரு தேவப்பிரிய, கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் மாத்திரமல்லாது போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் போராட வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.கடந்த ஆண்டில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 350 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

You might also like
error: Content is protected !!