டாக்டர் தொண்டை வலிக்குது.. பெண்ணோட வாயைத் திறந்து பார்த்தா.. ஷாக்காகிப் போன டாக்டர்!

ஜப்பானில் பெண் ஒருவர் தொண்டை வலிக்காக சென்ற போது அவரது தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.பொதுவாக நமக்கு எப்போதாவது சளி பிடித்தால் தொண்டையில் ஒரு இதமற்ற சூழல் ஏற்படும். கரகரப்பு, விழுங்குவதில் பிரச்சினை, தொண்டை கட்டுதல், தொண்டை வலி உள்ளிட்டவை ஏற்படும். ஆனால் இந்த சாதாரண ஒரு விஷயம் ஜப்பான் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மாறிவிட்டது.

ஆம் உண்மையில்தான். ஜப்பானில் 25 வயது பெண் ஒருவர் தொண்டையில் எரிச்சல் மற்றும் தொடர் வலி காரணமாக மருத்துவரை அணுகினார். தான் ஷாஷிமி என்ற உணவு வகையை உண்ட பிறகிலிருந்தே வலி ஏற்பட்டதாக தெரிவித்தார். சோயா சாஸுடன், வாசாபி பேஸ்ட்டை சேர்த்து பச்சையாக மீனை கடித்து சாப்பிடும் ஒரு வகை ஜப்பான் உணவுதான் ஷாஷிமி. இதையடுத்து மருத்துவரும் அவரது வாயை திறந்து காட்டுமாறு கூறினார். அந்த பெண்ணும் வாயை திறந்து காட்டினார். அப்போது பார்த்த மருத்துவருக்கு ஒரே அதிர்ச்சி.

அவரது தொண்டை பகுதியில் டான்சில்ஸ் எனப்படும் சதை பகுதிக்கு பின்புறத்தில் இடது பக்கம் ஒரு புழு நெளிந்ததை கண்டார். பின்னர் கருவிகளை கொண்டு அந்த புழுவை எடுத்தார். அந்த பெண்ணுக்கு தற்போது ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டது. அவை நார்மலாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

You might also like
error: Content is protected !!