பொதுஜன முன்னணி கட்சிக்குள் குழப்பம்?

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுபவர்களும், கட்சியின் தற்போதைய மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் ஆகியோர் ஒழுங்கான விதத்தில் நடந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மேர்வின் சில்வாவுக்கு ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச இரக்கம் காட்டினார். இம்முறை அவ்வாறு நடக்காது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பொருத்தமற்ற சில வேட்பாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வேட்பாளர் நியமன சபை வழங்கியுள்ளது” எனவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அண்மையில் எமது கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர் காணொளி ஒன்றை எனக்கு அனுப்பி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கழுதைகளுக்கும் குதிரைகளுக்கும் வேட்புமனுவை வழங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார். நான் அதனை மறுத்ததுடன் நிச்சயமாக கட்சியின் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நியமன சபையில் கழுதையொன்று இருக்கவேண்டும்; அதன் காரணமாகவே உங்களுக்கு வேட்புமனு கிடைத்துள்ளது எனத் தெரிவித்தேன்” – என்றார்.

You might also like
error: Content is protected !!