பிரான்சில் படுகொலை: வாடகை கொடுக்கவில்லை என்று அடித்தே கொல்லப்பட்டாரா?

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜேசுதன் தியாகராஜா (வயது 43) என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வீட்டு வாடகை கொடுக்காமல் கடந்த 2 மாதங்களாக இருந்ததாக கூறி. வீட்டு உரிமையாளர் சில நண்பர்களை வைத்து இவரை தாக்கி வெளியேற்றியுள்ளார். இதனை அடுத்து வீதியில் அனாதரவாக இருந்த ஜேசுதனை பொலிசார் மீட்டு, வைத்தியசாலை அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் இன் நிலையில், கடந்த ஞாயிறு அன்று, ஜேசுதன் வீட்டில் இறந்து கிடப்பதாக உரிமையாளர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

அவரை துரத்தி வீட்டை பூட்டிய உரிமையாளர் கூறுவதில் சந்தேகம் உள்ளதாக அயவலர்கள், கூறுகிறார்கள். ஏன் எனில் பூட்டி இருந்த வீட்டினுள் எப்படி ஜேசுதன் சென்றார் ? பின்னர் எப்படி மேலும் அடி காயங்களோடு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார் என்ற கேள்விகள் எழுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் பலர் வேலை இழந்து, வீட்டு வாடகையைக் கூட கட்ட முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். ஆனால் இதனை புரிந்துகொள்ள சிலரால் முடியவில்லை.

மேலும் ஜேசுதனுக்கு எந்த ஒரு உறவினர்களும் பிரான்சில் இல்லை என்றும். மனைவி யாழில் வசித்து வருவதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது.

You might also like
error: Content is protected !!