ஜனநாயகப் போராளிகளை வறுத்தெடுத்த ரூபன்: யாழில் நடந்த சுவாரஸ்யம்!

ஜனநாயகப்போராளிகளென சொல்லிக்கொள்பவர்கள் போராட்ட காலத்தில் எதனை செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது.ஆனால் தற்போது அரச புலனாய்வு பிரிவினரால் கையாளப்படுபவர்கள் என்பதை நிரூபிக்க தன்னிடம் பல சான்றுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழக பொறுப்பாளரான ரூபன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.2002ம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் எவரையும் வன்னியில் நான் கண்டிருந்தது கூட இல்லை.ஆயினும் தமிழ் செல்வனது அலுவலகங்களது பராமரிப்பாளர்களாக அவர்களில் சிலர் இருந்ததாக அறிகின்றேன்.அவர்களிற்கென சொல்வதற்கு விடுதலைப்போராட்ட பாதையில் ஏதுமில்லை.ஒருநாள் மகிந்தவுடன் படமெடுக்கின்றனர்.பின்னர் கோத்தபாயவுடன் படமெடு;ககின்றனர்.பின்னர் இரா.சம்பந்தனுடனும் படமெடுக்கின்றனர்.

தலைவன் என்று ஒருவனையே நாங்கள் வரித்துக்கொண்டவர்கள்.ஆனால் இந்த கும்பலோ நாளுக்கொரு தலைவனை கொண்டாடுகின்து.ஆனால் இப்போது புதிதாக கூட்டமைப்பினை அடுத்துவரும் ஆண்டுகளில் பொறுப்பேற்க போவதாக சொல்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் தலைமை எப்போது கூட்டமைப்பினை பொறுப்பேற்கவுள்ளதாக இவர்களிடம் சொல்லி வைத்ததென தெரியவில்லையெனவும் நையாண்டியாக அவர் மேலும் இதன் போது தெரிவித்தார்.

You might also like
error: Content is protected !!