நள்ளிரவில் ஜீன்ஸ்க்குள் புகுந்த பாம்பு: 8 மணி நேரம் போராடிய இளைஞர்; பெரும் பரபரப்பு!

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகர்பூர் என்ற கிராமத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் தங்கினர். அண்மையில் ஒருநாள் பணியை முடித்த தொழிலாளர்கள் அசந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது லவ்லேஷ் என்ற தொழிலாளியின் பேண்ட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. தன்னுடைய பேண்ட்டிற்குள் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்த லவ்லேஷ் நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்.

லவ்லேஷ் தனது பேண்ட்டிற்குள் பாம்பு இருப்பதைப் பார்த்து சகதொழிலாளிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அசைந்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற பயத்தில் அங்கிருந்த கம்பத்தை பிடித்தவாறு அசையாமல் நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு விடிந்தவுடன் உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடிக்கும் நபர் வரவைக்கப்பட்டார்.

பாம்பு பிடிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கொஞ்ச கொஞ்சமாக கிழித்து பாம்பை வெளியே கொண்ட வர போராடினார். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. அதுவரை அந்த இளைஞர் கம்பத்தை பிடித்தவாறே எந்த அசைவுமின்றி நின்று கொண்டிருந்தார்.

இதனிடையே இளைஞரின் பேண்ட்டில் பாம்பு புகுந்த சம்பவம் கேள்விப்பட்டு கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like
error: Content is protected !!