அன்று விடுதலைப்புலிகளுக்குள் துரோகி இன்று வீட்டுக்குள் துரோகி; விழித்துக்கொள் தமிழா!

விடுதலைப்புலிகள் பலமான ஒரு அமைப்பாக இருந்த 2002-ம் ஆண்டு 2-ம் மாதத்தில் சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சமாதானம் நிலவியது.

அதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன, அப்போது 2002, 2003-ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜரோப்பாவில் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

அப்போது விடுதலைப்புகளில் சார்பில் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்களில் ஒருவரான விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதி கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து பிரதமராக பதவி வகித்துக்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சியால், கருணா விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கையை, ஒழுக்கத்தை மீறி செயற்பட்டதால் 2004-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினார்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த 15 வருடங்களுக்கு பின்னரான 2020-ம் ஆண்டான இந்த வருடம் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி மட்டும்தான்.

இந்த கட்சியையும் உடைக்க இலங்கை ஜனாதிபதியாக இருக்கின்ற கோத்தபாய ராஜபக்சவின் அண்ணா மஹிந்தவின் புதல்வரான நாமல் ராஜபக்ச ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளார். 15 வருடங்களுக்குள் முன் ரணிலின் சூழ்ச்சிக்கு கருணா கிடைத்ததுபோல், இன்று நாமலின் சூழ்ச்சிக்கு விலை போயுள்ளார் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்.

ஆம் இன்று சிங்கள இனவெறி அரசின் நெருங்கிய நண்பன் சாள்ஸ்தான், சாள்ஸ்சை முன்னிறுத்தியே நாமலின் நடவடிக்கைகள் தொடர்கிறது, சாள்ஸ்சும் வெட்கமில்லாமல் பல லட்ஷம் தமிழ்மக்களை கொன்றுகுவித்த மஹிந்தவின் அரசியல்வாரிசு நாமல் என் நண்பன் என தமிழ் மக்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வருகிறார்.

இதை தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என தெரியவில்லை, இன்னும் தமிழ்மக்களாகிய நீங்கள் சாள்ஸ்சை வளர்த்துக்கொண்டு போவீர்களானால், தந்தை விடுதலைப்புலிகளை அழித்தார் நான் கூட்டமைப்பை அழித்தேன் என நாமல் தென்னிலங்கையில் மார்தட்டிக்கொள்ள நீங்களே சந்தர்ப்பம் கொடுத்ததாக போய்விடும், இதற்கு பெயர்தான் பொல்லை கொடுத்து அடிவாங்குவது என்பது.

You might also like
error: Content is protected !!