இலங்கை தேவாலயமொன்றை விலாவாரியாக வீடியோ எடுத்த நபர்; பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!

கொழும்பில் வோலயமொன்றை விலாவாரியாக வீடியோ எடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புனித பேதுரு தேவாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தேவாலயத்திற்குள் இன்று நுழைந்த சந்தேக நபர் ஆலயத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியை வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதனை அவதானித்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

You might also like
error: Content is protected !!