முரளிதரனை மாத்தையா ஆக மாற்றி நடிக்க வேண்டாம் என்று குண்டை போட்ட சீனுராமசாமி!

கிரிக்கெட் விளையாட்டு உலகில் மிகப்பெரிய வியாபாரம். எனவே அதில் உள்ள வீரர்களின் வாழ்க்கையை படமாக்கி பணம் குவிக்க முடியும். இதற்கு தோனி படம் ஒரு எடுத்துக்காட்டு. அந்த வகையில், தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியவர் தான் இலங்கையின் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கையை படமாக்கி காசு சம்பாதிக்க முனைகிறார்கள் சிலர். இதில் விஜய் சேதுபதி நடிப்பது தான் மிக கவலைக்குரிய விடையம்.

முத்தையாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கடந்த வருடமே தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் முதலில் நடிக்க மறுத்ததாகவும், பின்பு ஒத்துக் கொண்டதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார். இன் நிலையில் பல எதிர்ப்புகள் அவருக்கு கிளம்பி உள்ளது. அவர் ரசிகர்களே இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்றும், கூறும் அளவு நிலமை மோசமடைந்து விட்டது. இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷ் குடும்பத்தோடு ஒட்டி உறவாடியவர் முத்தையா முரளீதரன்.

இதனால் உலகத் தமிழர்கள் கடுமையாக எதிர்கிறார்கள். இன் நிலையில் விஜய் சேதுபதி இன்று சினிமாவில் கலக்கி வருவதற்கு அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இயக்குனர் சீனு ராமசாமி தான். தென் மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் என சேதுவை வைத்து படம் எடுத்தவர். சேதுவை மக்கள் செல்வன் என அழைக்க ஆரம்பித்ததும் இவர் தான். அவர் தனது ரிவீட்டரில் ஒரு பதிவை போட்டு உள்ளார்.

ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து தரும் வகையில் நடிக்கும் நீ ஏன் மா (மு)த்தையாவாக நடிக்கிறாய் என கேட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகின்றது. தன் நலம் விரும்பிகள் மனது கோணாதபடி நடப்பவர் விஜய் சேதுபதி. அவர் என்ன முடிவு எடுப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயம் அவர் இதில் நடிக்க மாட்டார் என அதிர்வு இணையம் நம்புகிறது.

முரளீதரனை மாத்தையா என்று, அழைத்த உணர்வு மிக்க சீனு ராமசாமிக்கு ஈழத் தமிழர்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். தமிழ் என்பது ஒரு உணர்வு. அது சீனு ராமசாமியிடம் நிறைய கொட்டிக் கிடக்கிறது. நன்றி தோழரே.

You might also like
error: Content is protected !!