மடுவில் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் அரச ஊழியர்களால் விற்கப்படும் வளங்கள்!

மடுப்பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் வினோஜிதா கணேஷ் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த யுத்த காலங்களில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசம் மடு, இந்த யுத்தத்தின் எதிரொலியாக இந்த பிரதேச வளங்கள் அழிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீளுருவாக்க இப்பிரதேச சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராடிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்பிரேதச வளங்கள் மீண்டும் பாரிய அழிவுகளை சந்தித்து வருகின்றது, அந்த வகையில் இப்பிரதேசத்தில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு வேற்று பிரதேச, மாவட்ட அரச உத்தியோகத்தர்கள், மடு பிரதேச அடிமட்ட அரச ஊழியர், ஒப்பந்தகாரர்களால் நிலங்கள் சூரையாடப்படுகிறது, மேலும் இந்த பிரிதேசத்தில் இருக்கின்ற கிரவல்களும் வேற்று இனத்தவரான முஸ்லிம்களால் அகழப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு பல அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருந்துவருகின்றனர், அதிலும் குறிப்பாக பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காடுகள் மற்றும் கிரவல்கள் சூரையாடப்படுகிறது.

இது தொடர்பில் இக்கிராம மக்கள் கிராம சேவகர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்த வளச்சுரண்டல்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். இதற்காக இப்பகுதி அரச மேலதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பிரதேச செயலாளர் இல்லாமல் அநாதரவாக கிடைக்கும் இந்த மடு பிரதேச செயலகத்தை உதவி பிரதேச செயலாளர் பண ஆசைக்காகவும், பதவி ஆசைக்காகவும் அரசியல்வாதிகளின், ஒப்பந்தக்காரர்களின் பண ஆசைக்கு முண்டு கொடுத்துவருகிறார் மடு உதவி பிரதேச செயலாளர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மடு உதவி பிரதேச செயலாளருக்கு உதவி வருகிறார். இவருக்கு ஆதரவாக இருக்கின்றார்.

இந்த செயற்பாடுகள் மடு பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. உடனடியாக இந்த வளச்சுரண்டல்கள் நிறுத்தப்பட்டு, மடு பிரதேச செயலகத்திற்கு ஒரு பிரதேச செயலாளரை நியமிப்பதுடன், தற்போது பதவி வகித்து வரும் மடு உதவி பிரதேச செயலாளர் மீது விசாரணைக்குழுவொன்றை நியமித்து இவரின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு மக்கள் மத்தியில் அரச திணைக்களங்கள் மீதிருக்கும் நம்பிக்கையை உறுதி செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

You might also like
error: Content is protected !!