கைக்குண்டுடன் சென்ற தம்பதியினர் பிடிக்கப்பட்டனர்; நோக்கம் என்ன?!

அவிசாவளை – மானியங்கம பகுதியல் கைக்குண்டொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உந்துருளி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவிசாவளை பகுதியில் வசித்து வரும் 38 மற்றும் 28 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like
error: Content is protected !!