தமிழர்களை கனேடிய உயர்ஸ்தானிகரிடம் விற்பனை செய்த டக்ளஸ்!

20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தெரித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்திருந்ததுடன் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினைக் குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர், அதுதொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன் இலங்கையின் சமுத்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

இதேவேளை, இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர்ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை சரியாகக் கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பம் என தான் நம்புவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது நாடு முழுவதுமுள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like
error: Content is protected !!