யாழ்ப்பாணம் நல்லூரில் நடு வீதியில் வாள் வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சுன்னாகம் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த தே.நடேசு (வயது 44) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக யாழில். வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Content is protected !!