புலம்பெயர் தேசத்தில் யாழ் நபர் கொரோனவால் பலி!

யாழ். மயிலிட்டியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பெல்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று முன்தினம் (12) உயிரிழந்துள்ளார்.

யாழ். மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த சுப்பையா-பிரதீப்என்பவர் புலம்பெயர்ந்து பெல்ஜியத்தில் வசித்து வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது வீட்டில் உள்ள ஏனைய சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Content is protected !!