வெற்றி பெறவில்லை என்றாலும் விஜய்யின் இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்தது எது தெரியுமா

மாஸ்டர் படம் குறித்த நாளில் வெளியாகாமல் போனது பலருக்கும் வருத்தமே. கல்லூரி பேராசிரியராக விஜய்யின் லுக்கை இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் லிரிக் வீடியோவில் பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள்.

விஜய்யின் குரலில் வந்த குட்டி ஸ்டோரி பாடல் ஏற்கனவே இணையதள சாதனைகளை செய்துவிட்டது. தொடர்ந்து வந்த வாத்தி கம்மிங் பாடல் அனைவரையும் ஆடவைத்துவிட்டது. டிக்டாக்கில் இப்பாடலுக்கு பலரும் ஆடிய நடனம் செம வைரல்.

கொரோனாவால் படம் தள்ளிப்போன சோகத்தில் ரசிகர்கள் இருந்து வந்தாலும் தற்போது விஜய்யின் முந்தைய படங்களை கொண்டாடி வருகின்றனர்.

ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட் என பல வெற்றிகளை கொடுத்த விஜய்க்கு இப்படம் தோல்வியாய் அமைந்தது யாரும் எதிர்பாராததே. அதே வேளையில் படம் சில சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் அந்த சமயத்தில் சந்தித்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜகுமார் இயக்கத்தில் வெளியான இப்படம் தற்போது 10 ம் ஆண்டு கொண்ட்டாட்டத்தை எட்டியுள்ளது.

இதனை ரசிகர்கள் #10YearsOfSura என டேக் மூலம் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி அனைவரையும் மகிழவைத்ததை மறக்க முடியுமா என்ன?அதிலும் கடலில் படகு போட்டிக்கு தாமதமாக சென்று வெற்றிக்கோப்பைக்காக செய்யும் கலாட்டா இன்றும் பலரையும் சிரிக்க வைக்கும் ஒன்று.

You might also like
error: Content is protected !!