பாஸ்கரன் வேண்டுமென்றே பொய்யான செய்திகளை வெளியிடுகின்றீர்கள்; கேவலமாக திட்டும் சுமந்திரன்!

LIBARA தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான கந்தையா பாஸ்கரன் அவர்களின் JVP நியூஸ், சினிமாவின் அந்தரங்க செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிடும் விடுப்பு நியூஸ், செய்தி வலையமைப்பின் அங்கத்துவத்திலிருக்கும் ஐபிசி தமிழ் தொலைக்காட்ச்சிக்கு விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் மக்களின் வரலாறு தெரியாத சுமந்திரன் ஒரு நேர்காணலை வழங்கியுள்ளார்.

அவர் வழங்கியுள்ள நேர்காணலில் கூறப்படாத கருத்துக்களை மேற்கோள் காட்டி ஐபிசி-தமிழ் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளதாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சுமந்திரன்.

மே-18 இனப்படுகொலை நடந்த நினைவுநாள் தினத்தைகூட பொருட்படுத்தாமல் தாங்கள் செய்தது சரியென ஐபிசி நிறுவனத்தினரும், நீங்கள் செய்தது பிழையென சுமந்திரன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளமான முகநூலில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் தனக்கு பிடிக்காதவர்களைப்பற்றி தவறாக செய்தி எழுதி தமிழ் மக்கள் மத்தியில் அவர்களின் மரியாதையை குறைப்பது பாஸ்கரனுக்கு கைவந்த கலை, அதேபோல் கருத்துக்களை ஜோசிக்காமல், தெரியாமல் சொல்லிவிட்டு நான் அப்படி சொல்லவேயில்லையென கதையை மாத்துவது சுமந்திரனுக்கு கைவந்த கலை.

மொத்தத்தில் இரண்டு தரப்பும் சிங்களத்தின் மற்றும் இந்திய உளவுத்துறை கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழ் தேசியத்திற்கு துரோகம் செய்பவர்கள்தான், அதனால் பாலுக்குள் நீர்கலந்தால் கவலைப்படலாம் ஆனால் இங்கு விஷத்திற்குள் விஷம்கலந்துள்ளது தமிழ் மக்கள் இரண்டு தரப்பையும் ஓரமாய் போய் விளையாடுங்கப்பா என ஒதுக்கிவிட்டு வேலையை பார்க்க வேண்டியதுதான்.

You might also like
error: Content is protected !!