சுமந்திரன் வெற்றி பெற்றால் தமிழ் தேசியம் அழிந்துவிடும்; பின்னணியில் இவ்வளவு இருக்கா!

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழருக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.
ஆனால் தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெற்றால்,

(1) நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றமே என்று தான் கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.

(2) போர்க்குற்ற விசாரணையில் புலிகள் செய்த இனச்சுத்திகரிப்பும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் எற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.

(3) ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் அதனை செய்தவர்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.

(4) இன அழிப்பு செய்தவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ கிடைத்தது பாக்கியம் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.

(5) தான் ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றதையும்; தனக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார்.

(6) அம்பிகா அன்ரிக்கு எம்.பி பதவி பெற்றுக் கொடுக்க தான் முனைவதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார்.

இவ்வாறு பல விடயங்களை சுமந்திரன் வெற்றி பெற்றால் கூறப் போகிறார்.
தமிழ் மக்கள் கையில் இருப்பது வோட்டு அல்ல வேட்டு. அதை அவர்கள் சுமந்திரனுக்கு எதிராக எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You might also like
error: Content is protected !!