கொரோனாவை விரட்ட கையில் முத்தம் வைத்தியம் கொடுத்த சாமியார் உயிரிழப்பு: முத்தம் பெற்றவர்கள் அதிர்ச்சி!

நம் நாடு நாகரீக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், புதிய தலைமுறையினர் இந்த மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இருப்பினும் இன்னமும் கூட சிலர் இவைகளை நம்பத் தான் செய்கின்றனர்.

சில மூட நம்பிக்கைகள் நகைச்சுவையாக இருந்தாலும் கூட, சில நம்பிக்கைகளில் சமுதாய ஈடுபாடுகள் காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி பக்தர்களை நம்பவைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து மாநில நிர்வாகம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரித்த போது அதனை கேட்காமல் கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அஸ்லம் பாபா என்ற சாமியார் கூறி வந்தார்.

இதையடுத்து கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்று சென்றனர். அப்படி வந்து சென்ற நபர்களில் யாரோ ஒருவர் அஸ்லம் பாபாவுக்கு கொரோனாவை கொடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முத்தல் பெற்று சென்ற நபர்கள் குறித்து மத்திய பிரதேச மாநில சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனாவுக்கு விடப்பட்ட சவாலில் அஸ்லாம் பாபாவை தாக்கி விட்டு தனது வீரியத்தை கொரோனா காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரிடம் முத்தம் வாங்கி சென்ற நபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

You might also like
error: Content is protected !!