மஹிந்தவுடன் ரகசியமாக பிறந்தநாள் கொண்டாடிய வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன்!

வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் பிறந்தநாளான நேற்று (17) ம் திகதி அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த தலைமையில் கேக்வெட்டி கொண்டாடப்படுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரகேசரி பத்திரிக்கை மூலம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்போலும், தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போலவும் காட்டிக்கொள்ளும் ஸ்ரீகஜன் போன்ற வீரகேசரி நிர்வாகத்தினர் இனப்படுகொலை செய்த மஹிந்த தலைமையில் ரகசியமாக பிறந்தநாள் கொண்டாடுவதை தமிழ் மக்கள் எப்படி பார்ப்பது.?

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் ஜக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக செயற்பட்டு வந்த ஸ்ரீகஜன் மற்றும் வீரகேசரி நிர்வாகம், இன்று கோத்தபாய ஜனாதிபதியானதும் அவர்களின் பக்கம் வாள்ப்பிடித்து செல்வது எலும்புத்துண்டுக்கு ஓடும் நாயை விட கேவலமானது என தமிழ்மக்கள் விமர்ச்சிக்கின்றனர்.

எது எப்படியோ வீரகேசரி மற்றும் ஸ்ரீகஜனின் தமிழ் தேசிய பற்று எப்படியிருக்கின்றது என தமிழ்மக்கள் நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

You might also like
error: Content is protected !!