எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம்.. தமிழினத்தின் உள்ளக்குமுறல்!

இரணமடு தண்ணீரை யாழ்ப்பாணம் வரவிடாமல் கடந்த 10 வருடங்களாக தடுத்து வைத்திருப்பவர்கள் யார் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

காணாமல் போனோர்களின் பிரச்சினைக்கு கடந்த 10 வருடங்களாக தீர்வை பெற்றுத்தராதவர்கள் யார் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் கடந்த 10 வருடங்களாக இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்ன எதையுமே கடந்த 10 வருடங்களாக செய்யாமல் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

முல்லைத்தீவு,கொக்கிளாய், நாயாறு பகுதிகளில் நடைபெறும் குடியேற்றங்களை கடந்த 10 வருடங்களாக தடுக்க முடியாமல் இருந்தவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

மகாணசபையின் இயக்கத்தை முடக்கியவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

உட்கட்சி பூசல்கள்கள், சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள் செய்து உலக மட்டத்திலே தமிழர்களை தலைகுனிய செய்தவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

ரணில் தருவார் தருவார் என்று விட்டு கடைசியில் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று முதலைக் கண்ணீர்விட்டவர்கள் யார் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

அப்பாவி மக்கள் சோற்றுக்கே வழியில்லாமல் இருக்க 70-80 இலட்சம் பெறுமதியான மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய ஆடம்பர கார்களில் உல்லாசம் அனுபவதித்தவர்கள் யார் என்பதை
அல்லது அந்த வாகனப் பெமிற்றை விற்று காசாக்கியவர்கள் யார் என்பதை நாங்கள்
மறந்துவிடுகிறோம்.

மத்தியிலே ரணில் அரசு விழும் தறுவாயில் இருந்தபோது அதை காப்பாற்றியவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

அபிவிருத்தி நிதி என்று ரணில் அரசு கொடுத்தபெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சார்பாக வாக்களித்தவர்களை யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

வெளியே தென்னிலங்கை தலைவர்களை எதிர்த்து வீரவசனம் பேசிவிட்டு தங்கள் வீட்டு விழாக்களுக்கு அவர்களை கேக் வெட்ட கூப்பிட்டவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

பினாமி பெயர்களில் யாழ்ப்பாணத்தில் வீடு, கொழும்பில் flats, வாங்கி குவித்தவர்கள் யார், இதற்கான காசு எங்கிருந்து வந்தது. என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

பினாமி பெயர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏக்கர் கணக்கான நிலங்களை வாங்கி ரியல் எஸ்ரேற் பிஸிசஸ் செய்பவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

பிரதேசவாதம், மதவாதம் பேசி மக்களை உசுப்பேற்றி மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களை பிரித்து வைத்திருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகிறோம்.

புலம்பெயர் மக்களிடம் மக்களுக்கென்று காசு வாங்கி
தன் பெயரில் வவுனியாவில் வைத்தியசாலை கட்டியவர்கள் யார் என்பதை நாங்கள் மறந்துவிடுகின்றோம்.

ஆயுதப்போராட்டத்தை கடைசிவரை காட்டிக்கொடுத்துவிட்டு இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் யார் என்பதை மறந்துவிடுகின்றோம்

You might also like
error: Content is protected !!