புலம்பெயர் ஈழத்தமிழனின் இந்த கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில் என்ன?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு புலம்பெயர் தமிழன் எழுப்பியுள்ள கேள்விகள்..

சுமந்திரன் ஐயா,

புலம்பெயர்ந்தவன் வாக்குப்போட மாட்டான் என்று மக்களை திசைதிருப்ப நன்றாய் காய் நகர்த்துகின்றீர்கள். உங்களுக்கு ஒன்று ஞாபகப்படுத்துதல் நல்லது என நினைக்கின்றேன்.

ஆளானப்பட்ட_புலிப்படையையே புலம்பெயர்ந்தவன்தான் தாங்கிப்பிடிச்சவன்.
சும்மா வாய்க்கு வந்தபடி கதைக்கக்கூடாது ராசா. அன்றிலிருந்து இன்றுவரை புலம்பெயர்ந்தவன்ர வியர்வையில் தான் அங்கத்தே ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்தது, நடக்கின்றது. இனியும் நடக்கும்.

அதென்ன உங்களுக்கு புலம்பெயர்ந்தவனின் வியர்வை மணம் சுகமாய் இருக்குது ஆனால் அவனின் உணர்வுகள் மட்டும் சுமையாய் இருக்குது ???

நீங்க ஏன் புலம்பெயருக்கு விசிட் அடிக்கிறனீங்க ??
என்னத்துக்கு வந்து புலம்பெயரானுக்கு வகுப்பெடுக்கிறனீங்க ??
உங்களுக்கு லண்டனில் வைத்து, நோட்டீஸ் ஒட்டி, உங்களை கதைக்க கூடாது என குரல்கொடுத்த எம் உணர்வாளர்களை, அமைதியாய் இருங்கள், அவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கு என சொல்லியவர்களில் நானும் ஒருவன் என நினைக்கையில் கவலையாய் இருக்கின்றது ஐயா.

விடுதலைப்புலிகளும், போராட்டமும் தலைப்பாய் இல்லாமல், மனுசனாட்டம் பரப்புரை செய்து ஒரு வாக்கு பெறமுடியுமா உங்களால் ?
ஈழத்தில் வாழ்பவனெல்லாம் உங்கள் #அம்பக் மூளையை உள்வாங்கும் அறிவில்லாக் கூட்டம் என நீங்கள் நினைப்பது அவ்வளவு நல்லதல்ல ஐயா.
நேர்மையின் மறு உருவம் என உலகே வியந்தவன் நடந்த மண்ணில் அதன் நேர் எதிர் உருவமாய் நிற்பது கொஞ்சக்கால வண்டி ஓட்டத்துக்கு சரி. ஓட்டுங்க. அப்படியே உங்களையும் ஒரு நாள் சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்த சிறிதரன் ஐயாவையும் சேர்த்து அணையுங்க. உங்களை அவர் அன்ரன் பாலசிங்கம் ஐயா என புகழ, நீங்கள் அவரை பிரபாகரன் அண்ணன் என புகழ்ந்து வண்டிகளை ஓட்டுங்க.

ஒன்றே ஒன்று தான்….
புலிப்படைக்கு மாற்று இல்லை. ஆனால் அதன் தொடர்ச்சி கூட்டமைப்பு தான். அந்த கூட்டமைப்பை உடைப்பதையோ, அல்லது அதற்குள் இருந்து கொண்டு சுய இலாபத்திற்காக மக்களை குழப்புவதோ நல்லதுக்கல்ல ஐயா.
சம்மந்தன் ஐயா, சுமந்திரன் ஐயா, சிறிதரன் ஐயா ஆகிய மூன்று தொப்பி புரட்டும் கூட்டுக் களவாணிகளையும் அப்புறப்படுத்தி, “வீட்டை” சுத்தமாக்கி பயணப்படுதல் தான் அறிவார்ந்த சமூகம் செய்ய வேண்டியது. அதற்கு இந்த தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்து, நாமும் அறிவான சமூகம் தான் என எம்மினம் விளிப்புக்கொள்ள வேண்டும்.

உறவுகளே…….அவர்களின் ஐஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைவார்த்தைகளுக்கும் இசைந்து விடாதீர்கள். அவர்களே புலம்பெயர் புண்ணியத்தில் தான் அரசியல் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். புலம்பெயர் உறவுகள் நிறையப்பேர்கள் ஊரை நோக்கி படையெடுக்கின்றார்கள். நிறைய முதலீடுகள் வடக்கு கிழக்கில் விதைக்கின்றார்கள். நாம் சேர்ந்து பலமாய் நிற்கும் காலம் வேகமாய் கிட்டும்.புலம்பெயரும், ஊரும் வேறு வேறென புதுக்கதை சொல்லும் சுமந்திரன் ஐயாவை புறக்கணியுங்கள். சுய இலாப நோக்குள்ளவர்களை வெளியேற்றி, கே.வி.தவராசா போன்ற பொதுப்பணியாளர்களை இனம் கண்டு இணையுங்கள்.

நன்றி,
-ஐங்கரன்-

You might also like
error: Content is protected !!