அரசாங்க அச்சுத் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கடமைகளில் அரசாங்க அச்சக திணைக்களம் தற்பொழுது மிகவும் செயற்றிறன் மிக்க வகையில் செயற்பட்டு வருவதுடன் இந்த கடமைகள் கொவிட்-19 தொற்றை தடுக்கும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடுமையாக கடைப்பிடித்து மேற்கொண்டு வருவதாக அரசாங்க அச்சக திணைக்கள அரச அச்சகர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,

விசேடமாக இந்த தேர்தலின் போது சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் ஏனைய தேர்தல்களிலும் பார்க்க கூடுதலான காலநேரம் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேவை என்பதுடன், தேர்தலுக்கான அச்சு பணிகளை விரைவாக பூர்த்தி செய்து தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.

இதற்கு அமைவாக 2020.06.04 திகதி அன்று வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரையில் சுகாதார பிரச்சினைகளைக் கொண்டவர்களை தவிர்ந்த ஏனைய மொத்த பணியாளர் சபையினரின் பங்களிப்புடன் இந்த பணிகள் மிகவும் செயற்றிறன் மிக்க வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.

இதில் அரச அச்சக திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான அச்சு கடமைகளில் வாக்காளர் அட்டைகளை அச்சிடுதல் போன்றே மேலும் சம்பந்தப்பட்ட அச்சு பணிகள் பல உள்ளடங்கியுள்ளன.

இதற்கு அமைவாக திணைக்களத்தின் ஏனைய நிறுவன கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அமைவாக, இதுவரையில் அரச அச்சக திணைக்களம் அனைத்து கடமைகளையும் ஆகக்கூடிய பணியாளர்களின் பங்களிப்பைப் பெற்று மிகவும் துரிதமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதில் திணைக்களத்தின் அனைத்து கடமைகளையும் செயற்றிறன் மிக்க வகையில் நிறைவேற்றுவதற்கும் இந்த கடமைகளை நிறைவேற்றும் பணியாளர் சபையின் சுகாதார பாதுகாப்பை ஆகக்கூடிய வகையில் முன்னெடுப்பதற்கும் ஆகக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் கீழ் கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக சுகாதார பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிப்பதற்கும் திணைக்களத்தின் உள்ளக சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளை தொடர்ச்சியாக செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிருமி நீக்கும் பணிகள், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் ஊழியர்களுக்கு சுகாதார பாதுகாப்பிற்கு தேவையான வசதிகளைச்செய்தல் போன்ற உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகள் பல நாளாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதேபோன்று சுகாதார பிரச்சினைகளை கொண்டவர்கள் கடமைகளுக்காக அழைக்கப்படுவதில்லை.

இதுவரையில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தினங்களில் இதனுடன் தொடர்புபட்ட பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கு அமைவாக முறையான சுகாதார பாதுகாப்பு முறையின் கீழ் தேர்தல் தொடர்பான அச்சு நடவடிக்கைகளை உரிய முறையில் பூர்த்தி செய்வதற்கு அரசாங்க அச்சக திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like
error: Content is protected !!