கருணா விவகாரத்தில் கையை விரித்தார் மகிந்த தேசப்பிரிய

கருணா தொடர்பில் எதனையும் செய்ய முடியாத நிலையில் தாம் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனையிறவில் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொன்றதாக கருணா தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து அவரது வேட்பு மனுவை ரத்துச் செய்து தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவேண்டுமென ஒபல்மே சோபிததேரர் தேர்தல்ஆணைக்குழுவில் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

கருணா தொடர்பாக உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். தேர்தல் ஆணைக்குழு எதனையும் செய்ய முடியாத நிலையிலுள்ளது என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருணாவின் கருத்துக்கள் குறித்து சட்டஅமுலாக்கல் நடவடிக்கை எடுக்கலாம் விசாரணை செய்யலாம் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

You might also like
error: Content is protected !!