35 வயது அதிகமான பெண்ணை மணந்த இளைஞன்… பின் தெரிந்த உண்மை; கொழும்பில் நடந்த கூத்து!

ஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ப்ரியஞ்சனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ப்ரியஞ்சனாவிற்காக அதிக அளவு பணத்தை செலவு செய்யத் தொடங்கினார் டையன். பிரிட்டனில் தனக்கு இருந்த வீட்டை விற்பனை செய்து கொழும்பில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.

28,77,305 ரூபாய் மதிப்பில் ப்ரியஞ்சனாவிற்காக மினி பேருந்து வாங்கி கொடுத்தார். இதை சேர்த்து மொத்தமாக 92,81,628 ரூபாய் செலவு செய்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு ப்ரியஞ்சனா அவரது நண்பர் வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். டையன் ப்ரியஞ்சனா வசதியாக வாழ்வதை பார்த்த அவரது நண்பர்கள்தான் அவரை பணத்துக்காக கொன்று விட்டதாக கூறியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் கூறுகையில் ப்ரியஞ்சனா என் மீதிருந்த காதலால் என்னை திருமணம் செய்யவில்லை என்பதை தாமதமாகவே உணர்ந்தேன்.

You might also like
error: Content is protected !!